விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆடம் ஸாம்பா படம் | AP
கிரிக்கெட்

முதல் டி20: ஆடம் ஸாம்பா அபார பந்துவீச்சு; ஆஸி.க்கு 169 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டி லாகூரில் இன்று (ஜனவரி 29) நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சைம் ஆயுப் 22 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சல்மான் அகா 39 ரன்களும், பாபர் அசாம் 24 ரன்களும் எடுத்தனர். உஸ்மான் கான் 18 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆடம் ஸாம்பா 4 ஓவர்களில் வெறும் 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சேவியர் பார்ட்லெட் மற்றும் மஹ்லி பியர்டுமேன் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

In the first T20 match against Australia, the Pakistan team, batting first, scored 168 runs for the loss of 8 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்லைனில் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்!

மத்திய பட்ஜெட்! அதிக முறை தாக்கல் செய்தவரும் மிகச் சிறிய பட்ஜெட்டும்!

முன்னாள் பிரதமரை நேரில் சந்தித்த மோடி!

பென்ஸ் பிரியர்களுக்கு.. மேபேக் ஜி.எல்.எஸ். கார் அறிமுகம்!

3-ம் நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! ஆனால் ஐடி, ஆட்டோ, பார்மா பங்குகள் சரிவு!

SCROLL FOR NEXT