முகப்பு
கிரிக்கெட்

2-வது டி20: சல்மான் அகா, உஸ்மான் கான் அதிரடி; ஆஸி.க்கு 199 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2026 at 12:38 PM
அரைசதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டி20 போட்டி லாகூரில் இன்று (ஜனவரி 31) நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

சல்மான் அகா, உஸ்மான் கான் அதிரடி; 199 ரன்கள் இலக்கு!

டாஸ் வென்று முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் சல்மான் அகா மற்றும் உஸ்மான் கான் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். சல்மான் அகா 40 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, உஸ்மான் கான் 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஷதாப் கான் 28 ரன்களும், சைம் ஆயுப் 23 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் சேவியர் பாட்ர்லெட், மேத்யூ குன்னமேன், கூப்பர் கன்னோலி, சீன் அப்பாட் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

summary

In the second T20 match against Australia, the Pakistan team, batting first, scored 198 runs for the loss of 5 wickets.

முழு கட்டுரையைப் படிக்க →