ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டி லாகூரில் இன்று (ஜனவரி 29) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் வழக்கமான கேப்டன் மிட்செல் மார்ஷுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதையடுத்து, முதல் போட்டியில் டிராவிஸ் ஹெட் அணியைக் கேப்டனாக வழிநடத்துகிறார்.
ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் மேத்யூ ரென்ஷா, மஹ்லி பியர்டுமேன் மற்றும் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
In the first T20 match against Australia, Pakistan won the toss and elected to bat.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.