மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என வென்றுள்ளது.
இந்தப் போட்டியில் 220-க்கும் அதிகமான ரன்களை தெ.ஆ. அணி அதிவிரைவாக சேஸ் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
மே.இ.தீ. அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. முதல் டி20 யில் தெ.ஆ. அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இரண்டாவது டி20 நேற்றிரவு நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீ. அணி 20 ஓவர்கள் முடிவில் 221/4 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஹெட்மயர் 75, ரூதர்போர்ட் 57 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய தெ.ஆ. அணி 17.3 ஓவர்களில் 225/3 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
இந்த அணியில் டி காக் 115, ரியான் ரிக்கல்டன் 77 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்கள்.
கடைசி டி20 போட்டி நாளை (ஜன.31) இரவு 9.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
டெஸ்ட் போட்டிகள் விளையாடும் நாடுகளின் வரிசையில் 220-க்கும் அதிகமான ரன்களை அதிவிரைவாக சேஸ் செய்து தென்னாப்பிரிக்க அணி புதிய சாதனை படைத்துள்ளது.
டி20 உலகக் கோப்பை இன்னும் 8 நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணி சாதனை படைத்துள்ளது மற்ற அணிகளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.