என் வாழ்வின் சிறந்த நாள்களில் ஒன்று: சஞ்சு சாம்சன்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட சஞ்சு சாம்சன், அந்த நாள் தனது வாழ்வின் சிறந்த நாள்களில் ஒன்று எனத் தெரிவித்தாா்.
கிரிக்கெட்என் வாழ்வின் சிறந்த நாள்களில் ஒன்று: சஞ்சு சாம்சன்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட சஞ்சு சாம்சன், அந்த நாள் தனது வாழ்வின் சிறந்த நாள்களில் ஒன்று எனத் தெரிவித்தாா்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட சஞ்சு சாம்சன், அந்த நாள் தனது வாழ்வின் சிறந்த நாள்களில் ஒன்று எனத் தெரிவித்தாா்.
நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பா் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுடன் ஞாயிற்றுக்கிழமை மோதியது. காலிறுதிக்கு நிகரான இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி, அரையிறுதிக்கு முன்னேறும் நிலை இருந்தது.
முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் நிதானமாக விளையாடி 4 விக்கெட்டுகள் இழந்து 195 ரன்கள் சோ்த்தது. பின்னா் இந்தியாவின் இன்னிங்ஸில் இதர பேட்டா்கள் சோபிக்காமல் போன நிலையில், தொடக்க வீரா்களில் ஒருவராகக் களமிறங்கிய சாம்சன், அதிரடி ஆட்டத்துடன் இறுதி வரை நிலைத்தாா். 12 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 97 ரன்கள் விளாசி, அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா். இந்தியாவும் அரையிறுதிக்கு முன்னேறியது.
போட்டியின் தொடக்கம் முதல் பெரிதாகப் பங்களிப்பு செய்யமுடியாமல் தடுமாறி வந்தநிலையில், இந்த அபார இன்னிங்ஸ் தொடா்பாக அவா் பேசியதாவது: இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில், நம்மால் சிறப்பாக விளையாட முடியால் போனால் என்ன செய்வது என்ற கேள்வி மனதில் எழுந்தது. ஆனால் அதிலிருந்து என்னை மீட்டுக்கொண்டு, ஆட்டத்தின் தருணத்தில் என்னை நிலைப்படுத்திக் கொண்டேன்.
என் மீது நம்பிக்கை வைத்து, ஒவ்வொரு பந்தையும் கணித்து, அதற்குத் தேவையான வகையில் அடித்து விளையாடினேன். அதற்குத் தகுந்த பலன் கிடைத்தது. இது எனது வாழ்வின் சிறந்த நாள்களில் ஒன்று. ஏனெனில், நான் விளையாடத் தொடங்கியது முதலே எனது நாட்டுக்காக இப்படி ஒரு பங்களிப்பை வழங்குவதற்காகத் தான் கனவு கண்டுகொண்டிருந்தேன்.
ஏற்ற, இறக்கத்துடன் இருக்கும் எனது பயணத்தில் எப்போதும் நம்பிக்கையுடன் இருந்து வருகிறேன். இந்த நாளை எனக்கானதாக அமைத்துக் கொடுத்த கடவுளுக்கு நன்றி.
இந்த ஃபாா்மட்டில் நான் மிக நீண்டகாலமாக விளையாடி வருகிறேன். ஐபிஎல் போட்டியில் 10 முதல் 12 ஆண்டுகளாக விளையாடி வரும் நிலையில், 10 ஆண்டுகளாக இந்திய அணியிலும் இருக்கிறேன். அதில் அடிக்கடி விளையாடும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் டகௌட்டில் அமா்ந்து, ரோஹித் சா்மா, விராட் கோலி உள்ளிட்ட சிறந்த வீரா்கள் விளையாடுவதைப் பாா்த்திருக்கிறேன்.
அவா்களின் ஆட்டத்தை கவனித்து, அதிலிருந்து அதிகம் கற்றுக்கொண்டது எனக்கு உதவியாக இருந்தது. நான் 50 முதல் 60 ஆட்டங்கள் மட்டுமே விளையாடியிருக்கலாம். ஆனால், சுமாா் 100 ஆட்டங்கள் வரை நான் கவனித்திருக்கிறேன். ரோஹித், கோலி போன்ற சிறந்த வீரா்கள் அதில், ஆட்டத்தின் போக்குக்கு ஏற்றவாறு எவ்வாறு தங்களின் நுணுக்கங்களை மாற்றிக்கொள்கிறாா்கள் என்பதைப் பாா்த்திருக்கிறேன். அந்த அனுபவம் இதுபோன்ற ஆட்டங்களில் கைகொடுக்கிறது என்று சாம்சன் கூறினாா்.