ஐபிஎல் தொடரில் 3000 ரன்களைக் கடந்து இஷான் கிஷன் சாதனை!
ஐபிஎல் தொடரில் 3000 ரன்களைக் கடந்து இஷான் கிஷன் சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 3000 ரன்களைக் கடந்து இஷான் கிஷன் சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இன்று (மார்ச் 28) தொடங்கியது. சின்னசாமி திடலில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் விளையாடி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். அபிஷேக் சர்மா 7 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிதீஷ் குமார் ரெட்டி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால், சன்ரைசர்ஸ் அணி 29 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து, கேப்டன் இஷான் கிஷன் மற்றும் கிளாசன் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இஷான் கிஷன் சாதனை!
அதிரடியாக விளையாடிய கேப்டன் இஷான் கிஷன் அரைசதம் விளாசி அசத்தினார். இன்றையப் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம், ஐபிஎல் தொடரில் 3000 ரன்களைக் கடந்து அவர் சாதனை படைத்துள்ளார்.
குறைந்த பந்துகளில் 3000 ரன்களை அதிவேகமாகக் கடந்த 6-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் 3000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள்
ரிஷப் பந்த் - 2028 பந்துகளில்
யூசுப் பதான் - 2082 பந்துகளில்
சூர்யகுமார் யாதவ் - 2130 பந்துகளில்
சுரேஷ் ரெய்னா - 2135 பந்துகளில்
எம்.எஸ்.தோனி - 2152 பந்துகளில்
இஷான் கிஷன் - 2180 பந்துகளில்
கே.எல்.ராகுல் - 2203 பந்துகளில்