நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இஷான் கிஷன் அதிரடியாக 42 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (ஜனவரி 31) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடி வருகிறது.
இஷான் கிஷன் அதிரடி சதம்
டாஸ் வென்று முதலில் விளையாடி வரும் இந்திய அணி 15 ஓவர்களில் 180 ரன்களைக் கடந்து அதிரடியாக விளையாடி வருகிறது.
இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 42 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் 43 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும்.
சர்வதேச டி20 போட்டிகளில் இஷான் கிஷனின் முதல் சதம் இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.