முகப்பு
கிரிக்கெட்

அலீஷா ஹீலிக்கு இந்திய மகளிர் மரியாதை..! ஓய்வுக்கு முன்பாக சதம்!

கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த ஆஸி. மகளிரணியின் கேப்டன் குறித்து...

Updated On : 1 மார்ச், 2026 at 12:22 PM
அலீஷா ஹீலிக்கு இந்திய மகளிர் மரியாதை அளிக்கும் காட்சி. - படம்: பிசிசிஐ வுமன்.
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 12:06 PM

ஆஸ்திரேலிய மகளிரணியின் கேப்டன் அலீஷா ஹீலி தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

இந்திய மகளிரணியினர் அவருக்கு பேட்டிங் விளையாட வரும்போது, ’காட் ஆஃப் ஹானர்’ எனும் மாரியாதையைக் கொடுத்து வரவேற்பு அளித்தார்கள்.

Updated On : 1 மார்ச், 2026 at 12:10 PM

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிரணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Advertisement

முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய மகளிரணி 42 ஓவர்களில் 328/4 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய அலீஷா ஹீலி 98 பந்துகளில் 158 ரன்கள் எடுத்து அசத்தினார். தனது கடைசி போட்டியை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியுள்ளார்.

இந்தியா சார்பில் ஸ்நே ராணா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஜியார்ஜி ஹோல் 62 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பெத் மூனி 70 ரன்களுக்கும் அதிகமாக எடுத்து விளையாடி வருகிறார்.

35 வயதாகும் அலீஷா ஹீலி 124 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,777 ரன்கள் எடுத்துள்ளார்.

summary

Team India formed a guard of honour before the start of play today for Australia Captain Alyssa Healy, who is playing her Final ODI match

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.