முகப்பு
கிரிக்கெட்

அலீஷா ஹீலி, பெத் மூனி சதம்: இந்தியாவுக்கு 410 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸி.!

கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிரணியின் பேட்டிங் குறித்து...

Updated On : 1 மார்ச், 2026 at 1:05 PM
அலீஷா ஹீலி, பெத் மூனி. - படங்கள்: ஐசிசி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 12:34 PM

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிரணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 409 ரன்கள் குவித்துள்ளது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பில் கேப்டன் அலீஷா ஹீலி 158 ரன்கள், பெத் மூனி 106* ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

Updated On : 1 மார்ச், 2026 at 12:37 PM

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுள்ளது. கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிரணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Advertisement

தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய அலீஷா ஹீலி 98 பந்துகளில் 158 ரன்கள் எடுத்து அசத்தினார். தனது கடைசி போட்டியை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியுள்ளார்.

ஜியார்ஜி ஹோல் 62 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பெத் மூனி பொறுமையாக விளையாடி சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

Updated On : 1 மார்ச், 2026 at 12:38 PM

இந்திய மகளிரணி சார்பில் ஸ்நே ராணா, ஸ்ரீ சரணி தலா 2, தீப்தி, ரேணுகா, கேஷ்வி தலா 1 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

கடைசி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணியினர் மிகவும் சொதப்பினார்கள். இந்திய அணியினர் கடைசியில் ஆட்டத்தை தங்களது கட்டுக்குள் கொண்டுர முயன்றார்கள்.

இருப்பினும், நிகோலா கேரி அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு நெருக்கடி அளித்தார். குறிப்பாக, 49ஆவது ஓவரில் 22 ரன்கள் அடித்து இந்திய அணி நிலைகுலைந்தது. அவர் இறுதியில் 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.

summary

Alyssa Healy and Beth Mooney century in last ODI match, aussie womens set a target of 410 runs for India!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.