முகப்பு
கிரிக்கெட்

ரஹானே, ரகுவன்ஷி அரைசதம்: மும்பை இந்தியன்ஸுக்கு 221 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 220 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 29 மார்ச் 2026, 9:58 pm IST
பந்தை சிக்ஸருக்கு விளாசும் அஜிங்க்யா ரஹானே - படம் | ஐபிஎல் (எக்ஸ்)
பகிர்:

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 220 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் விளையாடியது.

Advertisement

ரஹானே, ரகுவன்ஷி அரைசதம்; மும்பைக்கு 221 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி அரைசதம் விளாசி அசத்தினர். ரஹானே அதிகபட்சமாக 40 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ரகுவன்ஷி 29 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஃபின் ஆலன் 37 ரன்களும், ரிங்கு சிங் 33 ரன்களும் எடுத்தனர்.

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது.

summary

Batting first against the Mumbai Indians in the IPL tournament, the Kolkata Knight Riders have scored 220 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.