FIFA 2018

ஃபிஃபா 2018: 2-1 கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை பிரான்ஸ் வீழ்த்தியது

Raghavendran

'உலகக் கோப்பை கால்பந்து 2018' குரூப் சி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜாம்பவான் பிரான்ஸ் அணியுடன் சனிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி மோதியது.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளின் கோல் முயற்சிகளும் முதல் பாதியில் துல்லியமாகத் தடுக்கப்பட்டன. 58-ஆவது நிமிடத்தில் க்ரீஸ்மான் அடித்த கோல் மூலம் பிரான்ஸ் அணி தனது கோல் கணக்கை தொடங்கியது. 

பின்னர் 61-ஆவது நிமிடத்தில் கிடைத்த ஃபெனல்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய ஜெடனிக், அதை கோலாக மாற்றினார். இதனால் ஆஸ்திரேலியா 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தது.

ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்த நிலையில், பிரான்ஸ் வீரர் ஃபோபா அற்புதமாக செயல்பட்டு 81-ஆவது நிமிடத்தில் துல்லியமாக கோல் அடித்தார். இதனால் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மீண்டும் முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து போட்டி முடியும் வரை இரு அணிகளின் கோல் முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், 2-1 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT