FIFA 2018

போராடி டிரா செய்த பிரேசில்: தொடர் வெற்றிக்கு தடைபோட்ட ஸ்விட்சர்லாந்து

ஸ்விட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் பிரேசில் அணி போராடி டிரா செய்தது.

Raghavendran

ஸ்விட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் பிரேசில் அணி போராடி டிரா செய்தது.

'உலகக் கோப்பை கால்பந்து 2018' பிரேசில், ஸ்விட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 5 முறை உலக சாம்பியனான பிரேசில், தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்திடம் போராடி டிரா செய்தது.

போட்டியின் முதல் பாதியில் பிரேசிலின் ஃபிலிப் கௌடினோ அபாரமாக செயல்பட்டு கோல் அடித்தார். இருப்பினும் சிறிது நேரத்தில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டீவன் சுபேர், அற்புதமாக தலையால் கோல் அடித்தார். இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது.

இருப்பினும் ஸ்விட்சர்லாந்து வீரர்களின் அபாரமான ஆட்டத்தாலும், அந்த அணியின் கோல் கீப்பர் யான் சோம்மரின் அற்புதமான செயல்பாட்டாலும் பிரேசில் அணி திணறியது. எனவே மேற்கொண்டு இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத காரணத்தால் போட்டி டிராவில் முடிந்தது.

இதன்மூலம் உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ந்து 9 துவக்க ஆட்டங்களில் வெற்றிபெற்று வந்த பிரேசில் அணிக்கு இதில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ம.க.ஸ்டாலின் மீது கொலை முயற்சி- நயினார் நாகேந்திரன் கண்டனம்

தில்லியில்.. சட்டவிரோதமாக வசித்த 15 வெளிநாட்டினர் வெளியேற்றம்!

கடன் வட்டியைக் குறைத்த கரூர் வைஸ்யா வங்கி!

இயக்குநர் பிறந்த நாள்! ஜனநாயகன் மேக்கிங் விடியோ!

3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்றம்

SCROLL FOR NEXT