FIFA 2018

மொராக்கோவை வெளியேற்றியது போர்ச்சுகல்: கிறிஸ்டியானோ ரொனால்டோ அபாரம்

 மாஸ்கோவின் லுஷ்னிகி மைதானத்தில் புதன்கிழமை மாலை இரு அணிகளுக்கு இடையிலான குரூப் பி பிரிவு ஆட்டம் நடைபெற்றது

DIN

உலகக் கோப்பை 2018-இல் இருந்து மொராக்கோ அணியை வெளியேற்றியது போர்ச்சுகல் அணி. மாஸ்கோவின் லுஷ்னிகி மைதானத்தில் புதன்கிழமை மாலை இரு அணிகளுக்கு இடையிலான குரூப் பி பிரிவு ஆட்டம் நடைபெற்றது.

ஐரோப்பிய சாம்பியனான போர்ச்சுகல் ஆட்டத்தின் தொடக்க முதலே தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்தியது. கேப்டனும், நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ அபார ஃபார்மில் உள்ள நிலையில் கோலடிப்பதில் அவா் தீவிர கவனம் செலுத்தினார். 

இதன் பலனாக 4-ஆவது நிமிடத்தில் மௌடின்ஹோ கார்னா் மூலம் அடித்த பந்தை ரொனால்டோ கோலாக்கினார். இது உலகக் கோப்பையில் அவா் அடிக்கும் நான்காவது கோலாகும். அதன் பின்னா் சமன் செய்ய மொராக்கோ அணி தீவிரமாக தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. ஆனால் கோலடிக்க முடியவில்லை. 

இதனால் முதல் பாதி ஆட்ட நிறைறவில் போர்ச்சுகல் 1-0 என முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியிலும் மொராக்கோ அணி ஆதிக்கம் செலுத்தியது. பெரும்பாலான நேரம் பந்து அதன் வசமே இருந்த நிலையில் கோலடிக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.

மொராக்கோ அணி சிறறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், விழலுக்கு இறைறத்த நீராகியது. போர்ச்சுகலிடம் 1-0 என பெற்றற தோல்வியால் உலகக் கோப்பை 2018-இல் இருந்து வெளியேற்றறப்பட்டது.

மொராக்கோ கடந்த 1986-இல் மட்டுமே ஓரே முறைற போர்ச்சுகலை வென்றிருந்தது. இதர 3 ஆட்டங்களில் இரண்டில் போர்ச்சுகல் வென்றது. கடந்த 10 உலகக் கோப்பை குழு ஆட்டங்களில் போர்ச்சுகல் ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்தது. 5-இல் வெற்றியும், 4-இல் சமனும் செய்தது.

ரொனால்டோ புதிய சாதனை:

மொராக்கோவுடன் அடித்த கோல் மூலம் இந்த உலகக் கோப்பையில் 4 கோல்கள் அடித்து அதிக கோலடித்த வீரா் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் சா்வதேச கால்பந்தில் 85 கோல்கள் அடித்த முதல் ஐரோப்பிய வீரா் என்ற சாதனையையும் அவா் படைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒளிவீசும் நிலா... ஐஸ்வர்யா லட்சுமி!

Madharasi review - கஜினி பாணியில் சிவகார்த்திகேயன்! அமரனை வெல்லுமா Madharasi? திரை விமர்சனம்

ம.க.ஸ்டாலின் மீது கொலை முயற்சி- நயினார் நாகேந்திரன் கண்டனம்

தில்லியில்.. சட்டவிரோதமாக வசித்த 15 வெளிநாட்டினர் வெளியேற்றம்!

கடன் வட்டியைக் குறைத்த கரூர் வைஸ்யா வங்கி!

SCROLL FOR NEXT