ஐபிஎல்

இந்த ஐபிஎல்-லில் அதிக சிக்ஸர்கள் அடித்த 20 வயது வீரர்!

ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு இவர் ஒரு சர்வசாதாரண கிரிக்கெட் வீரர். ஆனால், இரண்டே வாரங்களில் சூப்பர் ஹீரோவாகிவிட்டார்.

ச. ந. கண்ணன்

இந்த ஐபிஎல்-லில் இதுவரை அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் யார் என்று கேட்டால் என்ன பதில் கிடைக்கும்?

கெய்ல், மெக்கல்லம், டிவைன் ஸ்மித், பொலார்ட், டிவில்லியர்ஸ்.... என்றுதானே சொல்வார்கள்?

ஆனால், இந்த ஐபிஎல்-லில் இதுவரை அதிக சிக்ஸர்கள் அடித்தவர், 20 வயது ஸ்ரேயாஸ் ஐயர்! ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு இவர் ஒரு சர்வசாதாரண கிரிக்கெட் வீரர். ஆனால், இரண்டே வாரங்களில் சூப்பர் ஹீரோவாகிவிட்டார்.

இதுவரை சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா என ஒரு புதிய திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஐபிஎல் இப்போது ஸ்ரேயாஸ் ஐயரை மத்தியில் நிறுத்தியுள்ளது.

ஆடிய 6 போட்டிகளில் 227 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். டெல்லி வீரர்களில் முதலிடம். ரஞ்சி, டி20 என இரண்டிலும் அமர்க்களப்படுத்துவது சுலபமல்ல. சென்ற ரஞ்சிப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த மும்பை வீரர்,  ஸ்ரேயாஸ் ஐயர் தான். ரஞ்சிப் போட்டியில் முதல் மேட்சில் 7வதாக களமிறங்கினார். தொடர்ந்து ரன்களைக் குவித்ததால் 3-வது பேட்ஸ்மேனாக பதவி உயர்வு பெற்றார். ரஞ்சியில் சாதித்ததால் ஐபிஎல் ஏலத்தில் எதிர்பாராத தொகைக்குத் தேர்வானார்.

ஸ்ரேயாஸின் திறமையைச் சரியாக கணித்த டெல்லி அணி, ஏலத்தில் 2.6 கோடி ரூபாய்க்குத் தேர்ந்தெடுத்தது. ஆரம்ப விலையான 10 லட்சத்தில் ஏலம் ஆரம்பித்து 2.6 கோடி வரை சென்றபோது தனிக்கவனம் பெற்றார் ஸ்ரேயாஸ். இத்தனைக்கும் ஏலத்தில் முதலில் மும்பையும் கொல்கத்தாவும்தான் இவருக்காகக் கடுமையாகப் போட்டியிட்டன. 2 கோடி வரை நீண்டபோது மும்பை பின்வாங்கியது. இதன்பிறகே போட்டியில் களமிறங்கிய டெல்லி, ஒரேடியாக அதிக தொகைக்கு வளைத்துப் போட்டுவிட்டது. டெல்லி அணியின் பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரேவுக்கு ஸ்ரேயாஸை 13 வயதிலிருந்து தெரியும். அவருடைய பலமான சிபாரிசில் டெல்லி அணி ஸ்ரேயாஸ் மீது நம்பிக்கை வைத்தது வீண்போகவில்லை.

சரி, சிக்ஸருக்கு வருவோம். இந்த ஐபிஎல்-லில் வார்னர், ரோஹித் சர்மா, டுமினி, மெக்கல்லம், பொலார்ட், தீபக் ஹூடா ஆகிய வீரர்கள் 10-க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்துள்ளார்கள். இவர்கள் அனைவரையும் விடவும் அதிக சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார், ஸ்ரேயாஸ் ஐயர். மொத்தம் 14 சிக்ஸர்கள்! இரண்டாவது இடத்தில் (12 சிக்ஸர்கள்) வார்னரும் பொலார்டும் உள்ளார்கள்.

ஐபிஎல் சிக்ஸர் போட்டி வழக்கமாக கெய்ல், பொலார்ட், ஸ்மித், மெக்கல்லம், வார்னர் ஆகிய வீரர்களிடையே தான் நடக்கும். இந்தப் போட்டியில் உள்ளே நுழைந்து ஒரு 20 வயது வீரர் முன்னணியில் இருப்பார் என்று யார் நினைத்திருக்கமுடியும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT