ஐபிஎல்

ஐபிஎல்: சென்னை ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி!

ஒரு அணி மட்டுமே ப்ளேஆஃப்புக்குத் தகுதிபெற்றுள்ளது. 3 இடங்களுக்கு 5 அணிகள் போட்டியிடுகின்றன.

சநகன்

சென்னை ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. சென்னை அணி ப்ளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிட்டது. பெங்களூரு அணியை பஞ்சாப் தோற்கடித்ததால் உண்டான விளைவு இது. இதனால் கடைசி மேட்சில் ஜெயித்தாகவேண்டிய கட்டாயம் சென்னைக்கு இல்லை.

இதுவரை 50 ஐபிஎல் ஆட்டங்கள் நடந்துமுடிந்துள்ளன. ஒரு அணி மட்டுமே ப்ளேஆஃப்புக்குத் தகுதிபெற்றுள்ளது. 3 இடங்களுக்கு 5 அணிகள் போட்டியிடுகின்றன. இதனால் இந்த ஐபிஎல்-லில் மீதமுள்ள 6 லீக் மேட்சுகளும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளன.

வாய்ப்பு 1: அடுத்த 6 போட்டிகளில்...

மும்பை, ஹைதராபாத், சென்னை, ராஜஸ்தான், பெங்களூரு, மும்பை ஆகிய அணிகள் வெற்றி பெற்றால் சென்னை (18), ஹைதராபாத், மும்பை, ராஜஸ்தான் (16) ஆகிய அணிகள் தகுதி பெறும்.  

வாய்ப்பு 2: அடுத்த 6 போட்டிகளில்...

கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய அணிகள் வெற்றி பெற்றால் கொல்கத்தா (19), சென்னை (18), பெங்களூரு (17), ஹைதராபாத் (16) ஆகிய அணிகள் தகுதி பெறும்.

வாய்ப்பு 3: அடுத்த 6 போட்டிகளில்...

மும்பை, ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, மும்பை ஆகிய அணிகள் வெற்றி பெற்றால் சென்னை, ராஜஸ்தான், மும்பை, ஹைதராபாத் ஆகிய அணிகள் 16 புள்ளிகளுடன் ப்ளேஆஃப்புக்குத் தகுதி பெறும்.

சென்னை:

சென்னை அணி, டெல்லியைத் தோற்கடித்திருந்தால் முதல் அணியாக ப்ளேஆஃப்புக்குத் தகுதி பெற்றிருக்கும். ஆனால், எதிர்பாராதவிதமாக மிக மோசமாக தோற்றுப் போனதால் ஐபிஎல்-லில் கூடுதல் சுவாரசியம் உண்டானது. பெங்களூரு அணியை பஞ்சாப் தோற்கடித்துள்ளதால் சென்னை அணி ப்ளேஆஃப்புக்குத் தகுதி பெறுவதில் சிக்கல்கள் இல்லை.

கொல்கத்தா:

இந்த அணிக்கு இன்னும் 2 மேட்சுகள் உள்ளன. இந்த இரண்டிலும் தோற்றுவிட்டால் 15 புள்ளிகளுடன் மட்டும் இருக்கும். மற்ற அணிகளின் வெற்றியால் கடைசியில் புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்துக்குப் போகவும் வாய்ப்புண்டு. 15 புள்ளிகளுடன் இருந்தாலும், பெங்களூரு மீதமுள்ள 2 மேட்சுகளிலும் தோற்கவேண்டும் மற்றும் ஹைதராபாத் மும்பையைத் தோற்கடித்தால் கொல்கத்தாவுக்கு ப்ளேஆஃப் நிச்சயம்.

மும்பை:

கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளைத் தோற்கடித்தால் 16 புள்ளிகள் கிடைக்கும். பிறகு ராஜஸ்தான் கொல்கத்தாவையும் அல்லது பெங்களூரு ஹைதராபாத்தையும் தோற்கடிக்கவேண்டும். பெங்களூரு அணி பஞ்சாப்பிடம் தோற்றுள்ளதால் மும்பை நிலைமை பாதுகாப்பாக உள்ளதுபோல உணரலாம்.

ராஜஸ்தான்:

கொல்கத்தாவைத் தோற்கடிக்கவேண்டும்.  பிறகு மும்பை கொல்கத்தாவையும் பெங்களூரு ஹைதராபாத்தையும் தோற்கடிக்கவேண்டும்.

பெங்களூரு:

ஆடவேண்டிய இரண்டு போட்டிகளிலும் வென்றாகவேண்டும். ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால் கொல்கத்தா இரண்டு போட்டிகளிலும் தோற்று ரன்ரேட்டில் பின்தங்கியிருக்கவேண்டும்.

ஹைதராபாத்:

மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெல்லவேண்டும். ஒரு போட்டியில் வென்றாலும் ரன்ரேட்படி செல்ல வாய்ப்புண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT