ஐபிஎல்

ரோஹித்தை தொடர்ந்து ரஹானேவுக்கும் ரூ.12 லட்சம் அபராதம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் அஜிங்க்ய ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Raghavendran

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் அஜிங்க்ய ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசன் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் அஜிங்க்ய ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐபிஎல் வெளியிட்ட அறிக்கையில்,

குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசாத காரணத்தால் (ஸ்லோ ஓவர் ரேட்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் அஜிங்க்ய ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. ஐபிஎல் விதிகளின் அடிப்படையில் அணியின் கேப்டனுக்கு தண்டனையாக அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, இதே காரணத்துக்காக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும் ஐபிஎல் நிர்வாகம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிபாட்டுக்கு 500 விநாயகா் சிலைகள்

புதுவையில் திமுக மாடல் ஆட்சி அமையும்: தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நம்பிக்கை

பெங்களூா் நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி முடிவு

ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

SCROLL FOR NEXT