ரஸ்ஸலின் நம்பமுடியாத அதிரடி ஆட்டத்தால் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்ட சிஎஸ்கே!
இந்த வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது கொல்கத்தா அணி...
நேற்று பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், தனது சிக்ஸர் மழையால் பெங்களூரு அணியிடமிருந்த வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறித்து கொல்கத்தாவுக்கு நம்பமுடியாத வெற்றியைத் தேடித்தந்தார் ஆண்ட்ரு ரஸ்ஸல்.
முதலில் ஆடிய பெங்களூரு 205/3 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 206/5 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் 7 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 13 பந்துகளில் 48 ரன்களை விளாசி கிரிக்கெட் உலகைத் தன் பக்கம் திருப்பியுள்ளார் ரஸ்ஸல்.
இந்த வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது கொல்கத்தா அணி. ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், சென்னை ஆகிய நான்கு அணிகளும் 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி கண்ட நிலையில் ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி தற்போது 4-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
புள்ளிகள் பட்டியல்
| அணிகள் | ஆட்டங்கள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நெட் ரன்ரேட் |
| ஹைதராபாத் | 4 | 3 | 1 | 6 | +1.780 |
| கொல்கத்தா | 4 | 3 | 1 | 6 | +0.534 |
| பஞ்சாப் | 4 | 3 | 1 | 6 | +0.164 |
| சென்னை | 4 | 3 | 1 | 6 | -0.084 |
| தில்லி | 5 | 2 | 3 | 4 | +0.029 |
| மும்பை | 4 | 2 | 2 | 4 | -0.087 |
| ராஜஸ்தான் | 4 | 1 | 3 | 2 | -0.333 |
| பெங்களூர் | 5 | 0 | 5 | 0 | -1.616 |