கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி: 4 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ள சிஎஸ்கே!
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளது சென்னை அணி...
ராஜஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை. முதலில் ஆடிய ராஜஸ்தான் 151/7 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 155/6 ரன்களை எடுத்து வென்றது. கடைசிப் பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸர் அடித்து சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார் ஆல்ரவுண்டர் சாண்ட்னர்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளது சென்னை அணி. பாதி ஆட்டங்களை விளையாடியுள்ள நிலையில் ஏழு ஆட்டங்களில் ஆறில் வென்று 12 புள்ளிகள் பெற்றுள்ளதால் சென்னை அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற இன்னும் 4 புள்ளிகள் எடுத்தால் போதும். இதனால் சென்னை அணி பிளேஆஃப்-புக்குச் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.