முகப்பு
ஐபிஎல்

ஐபிஎல் போட்டியிலிருந்து ஆர்சிபி வீரர் டேல் ஸ்டெயின் விலகல்!

கொல்கத்தா, சென்னை அணிகளுக்கு எதிராக ஸ்டெயின் விளையாடிய இரு ஆட்டங்களிலும் ஆர்சிபி அணி வென்றது...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:45 AM
பகிர்:

ஐபிஎல் 2019 போட்டியில் ஆர்சிபி அணிக்காக இரு ஆட்டங்களில் விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

கொல்கத்தா, சென்னை அணிகளுக்கு எதிராக ஸ்டெயின் விளையாடிய இரு ஆட்டங்களிலும் ஆர்சிபி அணி வென்றது. ஆனால், நேற்று நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டெயின் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் போட்டியிலிருந்து தற்போது விலகியுள்ளார். 

உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டெயின் இடம்பெற்றுள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பது குறித்த விவரம் இனிமேல்தான் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.