முகப்பு
ஐபிஎல்

பட்லருக்கு அஸ்வின் எச்சரிகை கொடுத்திருக்கலாம்: மன்கட் சர்ச்சை குறித்து டிராவிட் கருத்து!

அஸ்வினின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்குவது முற்றிலும் தவறு. அவர் தன் கருத்தைச் சொல்வதில் உரிமை உண்டு...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:29 AM
பகிர்:

ஐபிஎல் போட்டி வரலாற்றில் மன்கட் முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் ஜாஸ் பட்லர் என்பதால் அது குறித்து அதிக சர்ச்சை உருவாகியுள்ளது. திங்கள் அன்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப். கிறிஸ் கெயில் அபாரமாக ஆடி 79 ரன்களை விளாசினார். முதலில் ஆடிய பஞ்சாப் 184/4 ரன்களையும், பின்னர் ஆடிய ராஜஸ்தான் 170/9 ரன்களையும் எடுத்தன. 

2 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 69 ரன்கள் விளாசிய ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்தார் அஸ்வின்.  அவர் பந்துவீச முயன்றபோது கிரிஸுக்கு வெளியே பட்லர் பேட்டை நகர்த்தியதால் சமயோசிதமாக மன்கட் செய்தார் அஸ்வின். எனினும் இதுபோல ஒரு பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்வது தவறு என ஷேன் வார்னே உள்பட பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்து வீரர்கள் பலரும் அஸ்வினுக்கு எதிராக  ட்வீட்களை வெளியிட்டுள்ளார்கள்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அளித்த பேட்டியில் இந்த விவகாரம் குறித்துக் கூறியுள்ளதாவது:

அஸ்வின் பட்லரை மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தது, விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் உள்ளது. ஆக, அதை ஒருவர் செய்வதில் எனக்கு எவ்விதப் பிரச்னையும் இல்லை. தனிப்பட்ட முறையில் ஒருவர் அதுபோல செய்யும்முன்பு பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை அளிக்கவேண்டும் என நினைக்கிறேன். இது என் கருத்து மட்டுமே. இதை முற்றிலும் வேறாக ஒருவர் நினைப்பதை நான் மதிக்கிறேன். 

எனினும் இதுகுறித்த எதிர்வினைகளில் சில எதிர்வினைகள் விஷயத்தைப் பெரிதுபடுத்தியுள்ளன. அஸ்வினின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்குவது முற்றிலும் தவறு. அவர் தன் கருத்தைச் சொல்வதில் உரிமை உண்டு. அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அது விதிமுறைகளுக்கு உட்பட்ட செயலே. அந்தச் செயலால் அவர் கெட்ட மனிதர் ஆகிவிடமாட்டார். நான் முன்பே சொன்னதுபோல அவர் எச்சரிக்கை செய்திருக்கலாம். எனினும் அவர் அதைத் தேர்வு செய்யவில்லை. அது குறித்து உங்களுக்குப் பிரச்னை இருக்கக்கூடாது. ஜெண்டில்மேனாக உள்ளாரா இல்லையா என்பது பற்றி அல்ல இது. அவருடைய நடத்தை குறித்து மதிப்பீடு செய்வதல்ல இது, விதிமுறை குறித்த பார்வை. அவர் யாரையும் ஏமாற்றவில்லை. அதைச் செய்ததால் அவர் கெட்ட மனிதரும் அல்லர் என்று கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →