ஐபிஎல்

ஹாட்ரிக் சிக்ஸருடன் தோனி அதிரடி அரைசதம்: சரிவிலிருந்து மீண்ட சிஎஸ்கே 175 ரன்கள் குவிப்பு

12-ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 

Raghavendran

2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 12-ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் அஜிங்க்ய ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ரெய்னா, தோனி ஜோடி நிதான ஆட்டத்தில் ஈடுபட்டு ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 88-ஆக உயர்ந்த போது 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 36 ரன்கள் சேர்த்திருந்த சுரேஷ் ரெய்னா ஆட்டமிழந்தார்.

பின்னர் பிராவோவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி, அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டு அரைசதம் கடந்தார். மேலும் பிராவோவும் தன்பங்குக்கு 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விரட்டி 27 ரன்கள் சேர்த்தார். இதனால் அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. 

இந்நிலையில், கடைசி 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய தோனி, 46 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 4 இமாலய சிக்ஸர்களுடன் 75 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT