ஐபிஎல் லீக் சுற்றின் முடிவில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியல்
அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் வார்னரும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் ரபடாவும் முதலிடம்...
ஐபிஎல் 2019 போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன. வேறெந்த வருடத்தை விடவும் இந்த வருடம் ஒவ்வொரு அணியும் கடும் போட்டி மனப்பான்மையுடன் விளையாடியுள்ளன. இதனால் நான்காம் இடம் பெற்று பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கடைசி இடம் பெற்ற பெங்களூர் அணிக்கும் இடையே உள்ள புள்ளி வித்தியாசம் 1 மட்டுமே.
அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் வார்னரும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் ரபடாவும் முதலிடம் பிடித்துள்ளார்கள்.
அதிக ரன்கள்
| எண் | பெயர் | இன்னிங்ஸ் | ரன்கள் | சதங்கள் | அரை சதங்கள் | சிக்ஸர் |
| 1. | டேவிட் வார்னர் (ஹைதராபாத்) | 12 | 692 | 1 | 8 | 21 |
| 2. | கேஎல் ராகுல் (பஞ்சாப்) | 14 | 593 | 1 | 6 | 25 |
| 3. | ரஸ்ஸல் (கொல்கத்தா) | 13 | 510 | 0 | 4 | 52 |
| 4. | குயிண்டன் டி காக் (மும்பை) | 14 | 492 | 0 | 4 | 21 |
| 5. | கிறிஸ் கெயில் (பஞ்சாப்) | 13 | 490 | 0 | 4 | 34 |
அதிக விக்கெட்டுகள்
| எண் | பெயர் | இன்னிங்ஸ் | விக்கெட்டுகள் | 4 விக்கெட்டுகள் | எகானமி |
| 1. | ரபடா (தில்லி) | 12 | 25 | 2 | 7.82 |
| 2. | இம்ரான் தாஹிர் (சென்னை) | 14 | 21 | 2 | 6.50 |
| 3. | ஷ்ரேயஸ் கோபால் (ராஜஸ்தான்) | 14 | 20 | 0 | 7.22 |
| 4. | ஷமி (பஞ்சாப்) | 14 | 19 | 0 | 8.68 |
| 5. | சஹால் (பெங்களூர்) | 14 | 18 | 1 | 7.82 |