முகப்பு
கிரிக்கெட்

ஆர்சிபி வீரர்கள் அமைதியாகவும், தெளிவாகவும் இருக்கிறார்கள்: க்ருணால் பாண்டியா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அமைதியாகவும், தெளிவாகவும் இருப்பதாக அந்த அணி வீரர் க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளார்.

Updated On : 31 மார்ச் 2026, 3:51 pm IST
ஆர்சிபி வீரர்கள் க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார் - படம் | ஆர்சிபி (எக்ஸ்)
பகிர்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அமைதியாகவும், தெளிவாகவும் இருப்பதாக அந்த அணி வீரர் க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் கடந்த மார்ச் 28 ஆம் தேதி தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக விளையாடிய நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரை ஆர்சிபி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த ஆண்டைக் காட்டிலும் அமைதியாக இருப்பதாகவும், அணியில் உள்ள வீரர்கள் அவர்களது பொறுப்பு குறித்து தெளிவாக இருப்பதாகவும் அந்த அணி வீரர் க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் மிகவும் அமைதியான சூழல் நிலவுவதை உணர்கிறேன். கடந்த ஆண்டு புதிய அணி என்பதால், வீரர்கள் ஒருவரை ஒருவர் நன்றாக தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால், இந்த ஆண்டு வீரர்கள் பலரும் அணியில் தங்களது ரோல் என்ன என்பதை தெளிவாக புரிந்துகொண்டுள்ளார்கள்.

மிகப் பெரிய தருணங்களில் விளையாடும் சூழல் உருவாகும்போது, கடவுள் மிகப் பெரிய விஷயத்தை கொடுப்பதற்காக அந்த இடத்தில் என்னை விளையாட வைத்துள்ளதாக உணர்கிறேன். சில நேரங்களில் மிகப் பெரிய தருணங்கள் எனக்காக உருவாவதாக நினைக்கிறேன். மிகப் பெரிய தருணங்களில் இருக்கும் அழுத்தத்தை நான் உணர்கிறேன். ஆனால், அந்த மாதிரியான சூழலில் அமைதியாக செயல்பட்டு சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன் என்றார்.

summary

Royal Challengers Bangalore player Krunal Pandya has stated that the team is calmer and clearer this year compared to last year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.