ஐபிஎல்

ஐபிஎல் போட்டியில் இன்று என்ன நடக்கும்?: பரபரப்பில் ஹைதராபாத், கொல்கத்தா ரசிகர்கள்

ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும்.

DIN

ஐபிஎல் போட்டியின் 55-ஆவது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது. 

இந்த வெற்றியை அடுத்து பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்த தில்லி, தகுதிச்சுற்று 1 ஆட்டத்துக்கு வந்துள்ளது.  அதேபோல், பெங்களூரும் பிளே-ஆஃப்புக்கு முன்னேறியது. 

அபுதாபியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தில்லி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் அடித்து வென்றது. தில்லி பந்துவீச்சாளர் அன்ரிச் நோர்கியோ ஆட்ட நாயகன் ஆனார். 

இந்நிலையில் லீக் சுற்றின் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும். தோற்றால், ஏற்கெனவே 14 புள்ளிகளுடன் உள்ள கொல்கத்தா தகுதி பெறும். இதனால் இன்றைய ஆட்டத்தின் முடிவை கொல்கத்தா, ஹைதராபாத் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

SCROLL FOR NEXT