முகப்பு
ஐபிஎல்

ஆட்ட நாயகன் விருது: புதிய அணியில் உற்சாகமாகப் பந்துவீசி வரும் அஸ்வின்!

அஸ்வினை விடுவித்தது பெரிய தவறு என்பதை பஞ்சாப் அணி இப்போது உணர்ந்திருக்கும்.

ஐபிஎல்

ஆட்ட நாயகன் விருது: புதிய அணியில் உற்சாகமாகப் பந்துவீசி வரும் அஸ்வின்!

அஸ்வினை விடுவித்தது பெரிய தவறு என்பதை பஞ்சாப் அணி இப்போது உணர்ந்திருக்கும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
பகிர்:

2018, 2019 ஆண்டுகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்றார் அஸ்வின். அவர் கேப்டனாக இருந்த 28 ஆட்டங்களில் பஞ்சாப் அணி 12-ல் வெற்றியும் 16-ல் தோல்வியும் சந்தித்தது. 2018-ல் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடமும் 2019-ல் 6-ம் இடமும் பிடித்தது. இரண்டு வருடங்களிலும் கடைசிக்கட்டத்தில் மோசமாக விளையாடியதால் பிளேஆஃப்-புக்கு அந்த அணியால் தகுதி பெற முடியாமல் போனது. 

இதனால் இந்த வருடம் புது அணி, புதிய பயிற்சியாளர்கள், புது கேப்டனுடன் களமிறங்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் முடிவெடுத்தார்கள். இதன் அடிப்படையில் அஸ்வினை தில்லி அணிக்கு வழங்கியது. 

2018 ஐபிஎல் ஏலத்தில் அஸ்வினை ரூ. 7.60 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. அதே தொகைக்கு அஸ்வினை தில்லி அணி பெற்றுக்கொண்டது. 

இந்தமுறை புதிய அணியில் விளையாடும் வரும் அஸ்வின், சிறப்பாகப் பந்துவீசி தில்லி அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்க முக்கியக் காரணமாக இருந்து வருகிறார். 

இதுவரை விளையாடியுள்ள 4 ஆட்டங்களில் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 6.90 தான். இந்த வருட ஐபிஎல் போட்டியில் குறைந்தது 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள வீரர்களில் குறைந்த எகானமி உள்ள வீரர்களில் அஸ்வினுக்கு 4-ம் இடம். 

நேற்று, ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டும் கொடுத்து இரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்குக் கிடைத்துள்ளது. பஞ்சாப் அணி விக்கெட்டுகள் எடுக்கத் திணறி வரும் வேளையில் அவர்கள் விடுவித்த அஸ்வின், தில்லி அணியில் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். இந்த வருடம் பஞ்சாப் அணி எடுத்த பல முடிவுகள் தவறுதலாகப் போய்விட்டன. அஸ்வினை விடுவித்தது பெரிய தவறு என்பதை இப்போது அவர்கள் உணந்திருப்பார்கள். 

தில்லி அணி சிறப்பாக விளையாடி வருவதால் அந்த உற்சாகத்துடன் மேலும் சிறப்பாகப் பந்துவீசி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அஸ்வினுக்கு உருவாக வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →