நூலிழையில் சூப்பர் ஓவரைத் தவறவிட்ட பஞ்சாப்: 2 ரன்களில் தோல்வி
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஐபிஎல்நூலிழையில் சூப்பர் ஓவரைத் தவறவிட்ட பஞ்சாப்: 2 ரன்களில் தோல்வி
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
13-வது ஐபிஎல் சீசனின் 24-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த கொல்த்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா பேட்டிங்: ஐபிஎல்: தினேஷ் கார்த்திக் அதிரடியால் 164 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி!
பஞ்சாபின் நம்பிக்கை நட்சத்திரங்களான கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இந்த முறை நல்ல தொடக்கத்தையே அளித்தனர். வழக்கம்போல், ராகுல் விக்கெட்டைப் பாதுகாக்க அகர்வால் துரிதமாக ரன் சேர்த்து வந்தார். இதனால், பவர் பிளே முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்தது.
இருவரும் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை 9-க்கு மிகாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் எடுத்தது பஞ்சாப். இதைத் தொடர்ந்து, 42-வது பந்தில் ராகுலும், 32-வது பந்தில் அகர்வாலும் அரைசதத்தைக் கடந்தனர்.
இந்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில் 56 ரன்களுக்கு அகர்வால் ஆட்டமிழந்தார். இதையடுத்து, பூரண் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். அவரும் அதிரடி காட்டி 16 ரன்கள் எடுத்தார்.
வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 9-ஐத் தொடாமல் இருந்த நிலையில், நரைன் வீசிய 18-வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. குறிப்பாக பூரண் நரைன் ஓவரில்தான் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால், கடைசி 2 ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. 19-வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் பிரப்சிம்ரன் சிங் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் விக்கெட்டைப் பாதுகாத்து வந்த ராகுலும் ஆட்டமிழந்தார். ராகுல் 58 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். 2 விக்கெட்டுகள் விழுந்ததால், அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கிடைத்தன.
ராகுல் விக்கெட் பஞ்சாபுக்கு பெரிய இழப்பாக அமைந்தது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரை நரைன் வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள், 2-வது ரன் ஏதும் இல்லை, 3-வது பந்தில் பவுண்டரி, 4-வது பந்தில் லெக் பைஸுடன் ஒரு ரன் எடுத்தார் மேக்ஸ்வெல். ஆனால், 5-வது பந்தில் மந்தீப் சிங் சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார்.
இதனால், கடைசி பந்தில் ஆட்டத்தை சமன் செய்ய சிக்ஸர் தேவைப்பட்டது. மேக்ஸ்வெல் சிக்ஸர் அடிக்க முயன்று, பந்தை தூக்கி அடித்தார். பந்து பவுண்டரி எல்லைக்கோட்டுக்கு நூலிழைக்கு முன்பாக விழுந்ததால் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்த பஞ்சாப் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கொல்கத்தா அணித் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், நரைன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.