முகப்பு
ஐபிஎல்

ஆர்சிபி அணிக்காக 200 ஆட்டங்கள் விளையாடி விராட் கோலி சாதனை

2008 முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:38 PM
பகிர்:

ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி, அந்த அணிக்காக 200 ஆட்டங்களில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம் டி20 ஆட்டத்தில் ஒரே அணியில் அதிக ஆட்டங்கள் விளையாடிய வீரர், முதல்முறையாக ஓர் அணிக்காக 200 ஆட்டங்களைக் கடந்த வீரர் என்கிற பெருமைகளை அவர் பெற்றுள்ளார். 

2008 முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, ஐபிஎல் போட்டியில் 185 ஆட்டங்களும் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 15 ஆட்டங்களும் என மொத்தமாக அந்த அணிக்காக 200 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இதன்மூலம் ஓர் அணிக்காக 200 டி20 ஆட்டங்களில் விளையாடிய முதல் வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

தற்போது ஆர்சிபி அணி அவருக்கு வருடத்துக்கு ரூ. 17 கோடி சம்பளம் அளிக்கிறது. 

ஆர்சிபி அணிக்காக விளையாடும் கோலி

- 200 ஆட்டங்கள்
- ஐபிஎல்-லில் 185 ஆட்டங்கள்
- சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 15 ஆட்டங்கள்
- 40 அரை சதங்கள்
- 5 அரை சதங்கள்
- 113 அதிகபட்ச ஸ்கோர்

ஓர் அணிக்காக அதிக டி20 ஆட்டங்களில் விளையாடிய வீரர்கள்

200 - விராட் கோலி (ஆர்சிபி)
193 - ஜேம்ஸ் ஹில்ட்ரெத் (சோமர்செட்) 
191 - தோனி (சிஎஸ்கே) 
190 - சமித் படேல் (நாட்டிங்ஹாம்ஷைர்) 
187 - சுரேஷ் ரெய்னா (சிஎஸ்கே) 

முழு கட்டுரையைப் படிக்க →