முகப்பு
ஐபிஎல்

ஐபிஎல் பிளேஆஃப்: ஏழு வெற்றிகளுடன் சிஎஸ்கே அணியால் தகுதி பெற முடியுமா?

ஐபிஎல் வரலாற்றில் 12 புள்ளிகளுடன், ஏழு வெற்றிகளை அடையாமல் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்ற முதல் அணி...

ஐபிஎல்

ஐபிஎல் பிளேஆஃப்: ஏழு வெற்றிகளுடன் சிஎஸ்கே அணியால் தகுதி பெற முடியுமா?

ஐபிஎல் வரலாற்றில் 12 புள்ளிகளுடன், ஏழு வெற்றிகளை அடையாமல் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்ற முதல் அணி...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

ஐபிஎல் போட்டியில் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற குறைந்தது ஏழு அல்லது எட்டு வெற்றிகள் தேவை என்று கூறப்படும். 9 வெற்றிகள் என்றால் கட்டாயமாக பிளேஆஃப் உறுதி. 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. இதனால் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாத நிலையில் உள்ளதாக அதன் ரசிகர்கள் வருந்துகிறார்கள். நேற்றைய தோல்விக்குப் பிறகு தோனி, பிளெமிங்கின் பேட்டிகளும் இதையே உறுதி செய்கின்றன.

ஆனால் ஐபிஎல் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும் வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு இன்னும் உள்ளது. 

கடந்த வருடம், ஐபிஎல் வரலாற்றில் 12 புள்ளிகளுடன், ஏழு வெற்றிகளை அடையாமல் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்ற முதல் அணி என்கிற பெருமையைப் பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. நான்காம் இடம் பெற்று பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கடைசி இடம் பெற்ற பெங்களூர் அணிக்கும் இடையே உள்ள புள்ளி வித்தியாசம் 1 மட்டுமே. 

அதனால் லீக் சுற்றின் இறுதிக்கட்டங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சிஎஸ்கே அணிக்கு இன்னும் நான்கு ஆட்டங்கள் மிச்சம் உள்ளன. அந்த நான்கு ஆட்டங்களையும் ஜெயித்துப் பார்க்கவேண்டும். அதிர்ஷ்டம் இருந்தால் ஹைதராபாத் போல ஆறு வெற்றிகளுடன் கூட பிளேஆஃப்புக்குத் தகுதி பெறலாம். இதனால் ஏழு வெற்றிகளால் நிச்சயம் ஏதாவது திருப்புமுனை உண்டாக வாய்ப்புண்டு. பல அணிகள் 7 வெற்றிகளுடன் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளன. சிஎஸ்கே வீரர்கள் மனம் தளராமல் போராட வேண்டும். 

சிஎஸ்கே அணி கலந்துகொள்ளும் 11-வது ஐபிஎல் போட்டி இது (இடைக்காலத் தடை காரணமாக இரு வருடம் பங்கேற்கவில்லை). இதுவரை பங்கேற்ற ஒவ்வொரு முறையும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற ஒரே அணி என்கிற பெருமை சிஎஸ்கேவுக்கு உண்டு. இந்த வருடமும் அந்த வாய்ப்பு இன்னும் உள்ளது. சிஎஸ்கே வீரர்களும் ரசிகர்களுக்கும் நம்பிக்கை வைக்கவேண்டும். 

முழு கட்டுரையைப் படிக்க →