முகப்பு
ஸ்டோக்ஸ்
ஐபிஎல்

ஐபிஎல் போட்டியில் இதுவரை ஒரு சிக்ஸரும் அடிக்காத இரு பிரபல பேட்ஸ்மேன்கள்!

பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெலுக்கு ரூ. 10.75 கோடி சம்பளம் தரப்படுகிறது.

ஐபிஎல்

ஐபிஎல் போட்டியில் இதுவரை ஒரு சிக்ஸரும் அடிக்காத இரு பிரபல பேட்ஸ்மேன்கள்!

பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெலுக்கு ரூ. 10.75 கோடி சம்பளம் தரப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:42 PM
ஸ்டோக்ஸ்
பகிர்:


இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்டீவ் ஸ்மித்தும் பென் ஸ்டோக்ஸும் தலா ரூ. 12.50 கோடி சம்பளம் பெறுகிறார்.

ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நியூஸிலாந்தில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரை பென் ஸ்டோக்ஸ் கவனித்து வந்தாா். இதனால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்பகட்ட ஆட்டங்களில் அவரால் விளையாட முடியாமல் போனது. இந்நிலையில் கடந்த 5 ஆட்டங்களாக அவர் விளையாடி வருகிறார்.

அதிரடி ஆட்டத்துக்குப் பெயர் போன ஸ்டோக்ஸ், இந்த ஐபிஎல் போட்டியில் இதுவரை ஒரு சிக்ஸரும் அடிக்கவில்லை என்பது ஆச்சர்யமான தகவலாக உள்ளது. 5 ஆட்டங்களில் 103 பந்துகளை எதிர்கொண்ட ஸ்டோக்ஸால் ஒரு சிக்ஸரும் அடிக்கமுடியவில்லை. 14 பவுண்டரிகள் மட்டும் அடித்துள்ளார். 

கடந்த வருட ஐபிஎல் போட்டியிலும் சிக்ஸர் அடிக்கச் சிரமப்பட்டுள்ளார். 9 ஆட்டங்களில் 4 சிக்ஸர்கள் மட்டும் அடித்தார். இந்த வருட ஐபிஎல் போட்டிக்கு முன்பு 123 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்டோக்ஸ், 102 சிக்ஸர்களை அடித்துள்ளார். 

அதேபோல சிக்ஸர் அடிக்கத் திணறும் மற்றொரு பிரபல வீரர், மேக்ஸ்வெல். பஞ்சாப் வீரரான அவர் இதுவரை 10 ஆட்டங்களில் 87 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸரும் அடிக்க முடியாமல் உள்ளார். எட்டு பவுண்டரிகளுடன் மொத்தமாக 90 ரன்கள் எடுத்துள்ளார். பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெலுக்கு ரூ. 10.75 கோடி சம்பளம் தரப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →