ஐபிஎல்

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் தில்லி, மும்பையைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடத்தில் சிஎஸ்கே!

தில்லி, மும்பை அணிகளைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 

DIN

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் தில்லி, மும்பை அணிகளைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 

நேற்று மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வென்றது. முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களே எடுத்தது. பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அசத்திய மொயீன் அலி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், சென்னைக்கு இது 2-வது வெற்றி; ராஜஸ்தானுக்கு இது 2-வது தோல்வி.

இதனால் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 2-ம் இடம் பிடித்துள்ளது. முதல் இடத்தை ஆர்சிபி அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. பெங்களூர் 3 3 0 6 +0.750
 2. சென்னை 3 2 1 4 +1.194
 3. தில்லி 3 2 1 4 +0.453
 4. மும்பை 3 2 1 4 +0.367
 5. கொல்கத்தா 3 1 2 2 -0.633
 6. ராஜஸ்தான்  3 1 2 2 -0.719
 7. பஞ்சாப்  3 1 2 2 -0.967
 8. ஹைதராபாத் 3 0 3 0 -0.483

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிராஜ் அபாரம்: மே.இ.தீ. 162 ரன்களுக்கு ஆல் அவுட்!

தமிழகத்தில் 4 நாள்கள் கனமழை தொடரும்! சென்னை, புறநகருக்கு எச்சரிக்கை!

பங்குச்சந்தை முதலீடு மோசடி எப்படி நடக்கிறது? எச்சரிக்கை தேவை!!

ஜனவரியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்!

இணையம் மூலம் வரன் பார்ப்பவர்களைக் குறிவைக்கும் சைபர் குற்றவாளிகள்!

SCROLL FOR NEXT