ஐபிஎல்

ஆறு ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகள்: தொடர்ந்து அசத்தி வரும் ஆர்சிபி வீரர் ஹர்ஷல் படேல்

DIN

ஆர்சிபி அணியைச் சேர்ந்த ஹர்ஷல் படேல், இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகிறார்.

குஜராத்தைச் சேர்ந்த ஹர்ஷல் படேல், 2011-ல் ஹரியாணா அணிக்காக முதல் தரப் போட்டியில் அறிமுகமானார். 2012 முதல் ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி வருகிறார். ஆர்சிபி அணிக்காக ஆறு வருடங்கள் விளையாடிய பிறகு 2018-ல் தில்லி அணிக்கு மாறினார். மூன்று வருடங்களுக்குப் பிறகு ஆர்சிபி அணி ஹர்ஷல் படேலை மீண்டும் தேர்வு செய்தது.

மும்பை அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே ஐந்து விக்கெட்டுகளை எடுத்து அசத்திய 30 வயது ஹர்ஷல் படேல், தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். நேற்று தில்லிக்கு எதிரான ஆட்டத்திலும் சிறப்பாகப் பந்துவீசி 37 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதுவரை ஆறு ஆட்டங்களில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் தொடர்ச்சியாக ஆறு ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஆறு ஐபிஎல் ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகள்:

ஹர்ஷல் படேல் - 17
மலிங்கா - 16
ஜேம்ஸ் ஃபாக்னர் - 16
ரபாடா - 16

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT