ஐபிஎல்

பட்லர் சதம்: ராஜஸ்தான் 220 ரன்கள் குவிப்பு

DIN


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. கேன் வில்லியம்சன் தலைமையில் களமிறங்கிய ஹைதராபாத் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர். ராஜஸ்தானுக்கு அதிரடி தொடக்கம் அமையவில்லை. ஹைதராபாத் தரப்பிலும் இதுவரை இல்லாத வகையில் பவர் பிளேவில் அறிமுகப்படுத்தப்பட்டார் ரஷித் கான். அதற்குப் பலனாக ஜெய்ஸ்வால் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, பட்லர் சரியான டைமிங் கிடைக்காமல் திணறியதால் கேப்டன் சஞ்சு சாம்சன் ரன் ரேட்டை உயர்த்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

எனினும், ரன் ரேட் ஓவருக்கு 8-ஐத் தாண்டவில்லை. 10 ஓவர்கள் முடிவில் அந்த அணி 77 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

பெரிய ஸ்கோராக உயராது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சந்தீப் சர்மா 13-வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் சிக்ஸர் அடித்த பட்லர் 39-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். 

அந்த சிக்ஸருக்குப் பிறகு பட்லரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கலீல் அகமது ஓவரில் 1 சிக்ஸர், முகமது நபி ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள், புவனேஷ்வர் குமார் ஓவரில் பவுண்டரிகள், விஜய் சங்கர் ஓவரில் பவுண்டரிகள் என ராஜஸ்தானை சிதறடிக்க இரண்டாவது அரைசதத்தை 17 பந்துகளில் அடைந்தார். 39 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் 56 பந்துகளில் சதத்தை எட்டினார்.

இதனிடையே சஞ்சு 48 ரன்களுக்கு விஜய் சங்கரிடம் ஆட்டமிழந்தார்.

சதமடித்தும் பட்லர் அதிரடி காட்டத் தவறாது, சந்தீப் வீசிய 19-வது ஓவரில் மூன்று சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் பறக்கவிட்டார். ஆனால், அதே ஓவரில் அவர் ஆட்டமிழக்கவும் செய்தார். அவர் 64 பந்துகளில் 124 ரன்கள் சேர்த்தார்.

டேவிட் மில்லர் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இன்னிங்ஸை முடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT