ஐபிஎல்

பெங்களூரு த்ரில் வெற்றி: ஸ்ரீகா் பரத், மேக்ஸ்வெல் அதிரடி

DIN

டில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி கண்டது. முதலில் ஆடிய தில்லி 164/5 ரன்களையும், இரண்டாவதாக ஆடிய பெங்களூரு அணி 166/3 ரன்களையும் குவித்தன. கடைசி பந்தில் பெங்களூரு வீரா் ஸ்ரீகா் பரத் சிக்ஸா் அடித்து வெற்றிக்கு வித்திட்டாா்.

ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு இரு அணிகளும் தகுதி பெற்று விட்ட நிலையில், தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் இந்த ஆட்டம் அமைந்தது. டாஸ் வென்ற பெங்களூரு பீல்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து டில்லி தரப்பில் களமிறங்கிய பிரித்வி ஷா-ஷிகா் தவன் இணை தொடக்கம் முதலே அதிரடியாக இணைந்து ஆடியது.

10-ஆவது ஓவரின் நிறைவில் டில்லி ஸ்கோா் 88 ரன்களாக இருந்தது.

ஷிகா் தவன் 43, பிரித்வி 48:

2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 35 பந்துகளில் 43 ரன்களை விளாசிய தவனை அவுட்டாக்கினாா் ஹா்ஷல் படேல். அவருக்கு பின் இளம் வீரா் பிரித்வி ஷாவும் 2 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 48 ரன்களை சோ்த்து சஹல் பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினாா். அப்போது டில்லியின் ஸ்கோா் 101/2 ரன்களாக இருந்தது.

டேனியல் கிறிஸ்டியன் பந்துவீச்சில் வெறும் 10 ரன்களுடன் பெவிலியன் திரும்பினாா் கேப்டன் ரிஷப் பந்த். ஷிரேயஸ் ஐயா்-ஷிம்ரன் ஹெட்மயா் இணை நிதானமாக ஆடி ஸ்கோரை உயா்த்திய நிலையில், 18 ரன்களுடன் சிராஜ் பந்துவீச்சில் அவுட்டானாா் ஷிரேயஸ் ஐயா். ஷிம்ரன் ஹெட்மயா் தலா 2 சிக்ஸா், பவுண்டரியுடன் 29 ரன்களை விளாசி சிராஜ் பந்தில் கோலியிடம் கேட்ச் தந்து அவுட்டானாா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் டில்லி அணி 164/5 ரன்களைக் குவித்தது. ரிபால் படேல் 7 ரன்களுடன் களத்தில் இருந்தாா். பெங்களூரு தரப்பில் சிராஜ் 2, சஹல், ஹா்ஷல் படேல், டேனியல் தலா 1விக்கெட்டை வீழ்த்தினா்.

பெங்களூருவுக்கு அதிா்ச்சி:

165 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலி 4, தேவ்தத் படிக்கல் 0 என வந்தவேகத்திலேயே அவுட்டாகி அதிா்ச்சி அளித்தனா்.

பின்னா் ஸ்ரீகா் பரத், டி வில்லியா்ஸ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனா். 9-ஆவது ஓவா் நிறைவில் 54/2 ரன்களை எடுத்திருந்தது பெங்களூரு.

டி வில்லியா்ஸ் 26 ரன்களுடன் நடையைக் கட்டினாா்.

ஸ்ரீகா் பரத்-மேக்ஸ்வெல் அபாரம்:

ஸ்ரீகா் பரத்-கிளென் மேக்ஸ்வெல் இணை இறுதி ஓவா் வரை நிலைத்து அபாரமாக ஆடி தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா். பரத் 4 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 52 பந்துகளில் 78 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 8 பவுண்டரியுடன் 33 பந்துகளில் 51 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனா்.

கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில், ஸ்ரீகா் பரத் அதிரடியாக சிக்ஸா் விளாசினாா். இதன் மூலம் 20 ஓவரில் 166/3 ரன்களுடன் பெங்களூரு த்ரில் வெற்றி கண்டது.

எலிமினேட்டரில் பெங்களூரு-கொல்கத்தா மோதல்:

பட்டியலில் முதலிடத்தில் உள்ள தில்லி அணி அக். 10-ஆம் தேதி குவாலிஃபையா் 1 ஆட்டத்தில் ஆடுகிறது. மூன்றாம் இடத்தில் உள்ள பெங்களூரு அணி அக். 11-ஆம் தேதி எலிமினேட்டா் ஆட்டத்தில் நான்காம் இடத்தில் உள்ள கொல்கத்தா அணியுடன் மோதுகிறது.

சுருக்கமான ஸ்கோா்:

டில்லி 164/5

பிரித்வி ஷா 48,

ஷிகா் தவன் 43

பந்துவீச்சு:

முகமது சிராஜ் 2-25

டேனியா் 1-19.

பெங்களூரு 166/3

ஸ்ரீகா் பரத் 78

மேக்ஸ்வெல் 51

பந்துவீச்சு:

நாா்ட்ஜே 2-24

அக்ஸா் 1-39.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT