வெங்கடேஷ் ஐயர் 
ஐபிஎல்

பாண்டியாவுக்குச் சிக்கல்: வலைப்பயிற்சி வீரராக வெங்கடேஷ் ஐயர் தேர்வு

கேகேஆர் வீரர் வெங்கடேஷ் ஐயர், தில்லி வீரர் அவேஷ் கான் ஆகியோர் இந்திய அணிக்கான வலைப்பயிற்சி வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 போட்டியில் சிறப்பாக விளையாடிய கேகேஆர் வீரர் வெங்கடேஷ் ஐயர், தில்லி வீரர் அவேஷ் கான் ஆகியோர் இந்திய அணிக்கான வலைப்பயிற்சி வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியின் வலைப்பயிற்சி வீரர்களாக அவேஷ் கானும் வெங்கடேஷ் ஐயரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு இருவரும் இந்தியாவுக்குத் திரும்ப முடியாது.

தில்லி வேகப்பந்து வீச்சாளரான அவேஷ் கான், 15 ஆட்டங்களில் 23 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கேகேஆர் ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர், 8 ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 265 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 123.25. மேலும் சில ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணியில் விளையாடும் ஹார்திக் பாண்டியா ஒரு ஓவர் கூட வீசாததால் அவருடைய உடற்தகுதி குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. பாண்டியாவில் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டால் வெங்கடேஷ் ஐயர் இந்திய அணிக்குத் தேர்வாகவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT