ஐபிஎல்

தோனி மனைவி சாக்‌ஷி கர்ப்பம்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனியின் மனைவி சாக்‌ஷி கர்ப்பமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனியின் மனைவி சாக்‌ஷி கர்ப்பமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் 2021 போட்டியை சிஎஸ்கே அணி வென்றுள்ளது. துபையில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை 4-வது முறையாகக் கைப்பற்றியது.

நேற்று போட்டி முடிவடைந்த பிறகு தோனியின் மனைவி சாக்‌ஷி, மகள் ஸிவாவுடன் மைதானத்துக்குள் வந்து தோனியுடனும் இதர கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினருடனும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில் தோனியின் மனைவி சாக்‌ஷி கர்ப்பமாக உள்ளதாகவும் 2022-ல் குழந்தை பிறக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூகவலைத்தளங்களில் பலரும் இச்செய்தியைப் பகிர்ந்து வருகிறார்கள். எனினும் தோனி தரப்பிலிருந்து இத்தகவல் பற்றி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 

2010-ல் சாக்‌ஷியைத் திருமணம் செய்துகொண்டார் தோனி. இத்தம்பதியருக்கு 2015-ல் ஸிவா என்கிற மகள் பிறந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்திசார் நட்புக் கூட்டணி!

கோயில்மலையாற்றின் குறுக்கே ரூ.176.02 கோடியில் அணைக்கு அடிக்கல்

வெளிச்சத்துக்கு வராத விளக்குகள்!

சாலை விபத்தில் பேரூராட்சி பணியாளா் உயிரிழப்பு

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.32 கோடி

SCROLL FOR NEXT