ஐபிஎல்

வருண் சக்ரவர்த்தி தரமான பந்துவீச்சாளர்: பாராட்டும் நியூசி. பிரபலம்

கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தியைப் பிரபல...

DIN

கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தியைப் பிரபல நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் பாராட்டியுள்ளார்.

ஆர்சிபி அணிக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசிய வருண் சக்ரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. 
நான்கு ஓவர்கள் வீசிய வருண் சக்ரவர்த்தி 13 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் 15 பந்துகளில் அவர் ரன் எதுவும் கொடுக்கவில்லை. 

இந்நிலையில் கொல்கத்தா அணியை இன்று எதிர்கொள்கிறது மும்பை அணி. இதையடுத்து மும்பை அணியில் விளையாடும் பிரபல நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் கூறியதாவது:

சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடாத ரோஹித் சர்மாவும் பாண்டியாவும் உடல்நலத்தில் நன்கு முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் எப்போது விளையாடுவார்கள் என்று எனக்குத் தெரியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021 போட்டியில் இனிமேல் ஒவ்வொரு  ஆட்டமும் முக்கியமானதாகும். கேகேஆர் அணிக்கு எதிராக மும்பை அணி எப்போதும் நன்றாக விளையாடியுள்ளது. நல்ல வீரர்களைக் கொண்ட அணி அது. எனவே கொல்கத்தா அணியை எளிதாக எண்ண மாட்டோம். வருண் சக்ரவர்த்தி தரமான பந்துவீச்சாளர். 11-ம் நிலை வீரராக உள்ளதால் அவர் பந்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை எனக்கு வராது என எண்ணுகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

SCROLL FOR NEXT