கோப்புப்படம் 
ஐபிஎல்

ஆர்சிபி-க்கு எதிராகக் களமிறங்கும் ஹார்திக் பாண்டியா: மும்பை பந்துவீச்சு தேர்வு

​ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இரண்டு அணிகளுமே நடப்பு சீசன் இரண்டாம் பகுதியின் முதலிரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த அணிகள். இதனால், இரு அணிகளுக்குமே இது முக்கியமான ஆட்டம்.

இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பை அணியில் கடந்த இரண்டு ஆட்டங்களில் விளையாடாத ஹார்திக் பாண்டியா இம்முறை களமிறங்குகிறார்.

பெங்களூருவில் நவ்தீப் சைனி, வனிந்து ஹசரங்கா மற்றும் டிம் டேவிட் ஆகியோருக்குப் பதில் ஷபாஸ், டேன் கிறிஸ்டியன் மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

SCROLL FOR NEXT