கோப்புப்படம் 
ஐபிஎல்

கோலியைப் போல் நடித்துக் காட்டிய டி வில்லியர்ஸ்: விடியோ வைரல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் விராட் கோலி களத்தில் வெளிப்படுத்தும் ஆக்ரோஷத்தை நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் நடித்துக் காட்டிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

DIN


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் விராட் கோலி களத்தில் வெளிப்படுத்தும் ஆக்ரோஷத்தை நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் நடித்துக் காட்டிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

14-வது ஐபிஎல் சீசனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெங்களூரு மும்பையை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதைத் தொடர்ந்து, பெங்களூரு அணி வீரர்களிடம் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பும், பின்பும் கேப்டன் கோலி ஆற்றிய உரை, பயிற்சியாளர் மைக் ஹெஸன் பேச்சு, ஆட்டத்தில் முக்கியப் பங்காற்றிய கிளென் மேக்ஸ்வெல், யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்டோரது கருத்துகள் அடங்கிய விடியோவை அணி நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியது. இதுதவிர டிரெஸ்ஸிங் அறையில் வீரர்களின் கிண்டல், கேலி அடங்கிய காட்சிகளும் அந்த விடியோவில் இடம்பெற்றுள்ளன.

எதிரணியின் விக்கெட்டுகள் விழுந்தால், களத்தில் விராட் கோலியின் ஆக்ரோஷ கலந்த கொண்டாட்டம் அனைவரும் அறிந்தது. அவர் ஆக்ரோஷம் அடைந்தால் என்ன செய்வாரோ அதை பெங்களூரு அணியின் சக வீரர் ஏபி டி வில்லியர்ஸ் மற்ற வீரர்களிடம் அப்படியே நடித்துக் காட்டியுள்ளார். இந்தக் காட்சிகளும் அணி நிர்வாகம் வெளியிட்ட விடியோவில் இடம்பெற்றுள்ளன.

இதைப் பார்த்த ரசிகர்கள் டி வில்லியர்ஸின் கிண்டலை சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT