ஐபிஎல்

ஐபிஎல் போட்டியிலிருந்து அர்ஜுன் டெண்டுல்கர் விலகல்: புதிய வீரரைத் தேர்வு செய்த மும்பை அணி

ஐபிஎல் போட்டியிலிருந்து அர்ஜுன் டெண்டுல்கர் விலகியதால் மற்றொரு வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. 

DIN

ஐபிஎல் போட்டியிலிருந்து அர்ஜுன் டெண்டுல்கர் விலகியதால் மற்றொரு வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. 

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றார். 21 வயது அர்ஜுன் விளையாடிய இரு ஆட்டங்களிலும் மும்பை அணிக்குத் தோல்வியே கிடைத்தன. ஹரியாணாவுக்கு எதிராக 1/34, புதுச்சேரிக்கு எதிராக 1/33 என சுமாராகவே பந்துவீசினார். பிறகு ஐபிஎல் ஏலப்பட்டியலில் அர்ஜுனின் பெயர் இடம்பெற்றது. இடது கை வேகப்பந்துவீச்சாளரான அர்ஜுன், இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகப் பணியாற்றியுள்ளார். இந்திய யு-19 அணிக்காகவும் விளையாடியுள்ளார். 

ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. எனினும் இதுவரை விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது அர்ஜுன் டெண்டுல்கருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தில்லி வேகப்பந்துவீச்சாளர் சிமர்ஜீத் சிங்கை மும்பை அணி தேர்வு செய்துள்ளது. சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக சிமர்ஜீத் சிங் இடம்பெற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT