ஐபிஎல்

இந்த இலக்கை அடையும் 3-வது சிஎஸ்கே வீரர்: ஜடேஜாவின் புதிய சாதனை

2012 முதல் சிஎஸ்கேவுக்காக விளையாடி வரும் ஜடேஜா, 150-வது ஆட்டத்தை விளையாடும் மூன்றாவது சிஎஸ்கே வீரர் என்கிற பெருமையை அடைவார்.

DIN

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக 150-வது ஆட்டத்தில் விளையாடவுள்ளார் ஜடேஜா.

நவி மும்பையில் சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் அணிகள் நாளை விளையாடவுள்ளன. இந்த ஆட்டத்தில்தான் இந்த இலக்கை ஜடேஜா அடையவுள்ளார்.

2012 முதல் சிஎஸ்கேவுக்காக விளையாடி வரும் ஜடேஜா, 150-வது ஆட்டத்தை விளையாடும் மூன்றாவது சிஎஸ்கே வீரர் என்கிற பெருமையை அடைவார். இதற்கு முன்பு தோனி 217 ஆட்டங்களிலும் ரெய்னா 200 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்கள்.

சிஎஸ்கேவுக்காக 149 ஆட்டங்களில் 110 விக்கெட்டுகளும் 1523 ரன்களும் எடுத்துள்ளார் ஜடேஜா. கடந்த வருடம் ஆர்சிபி அணிக்கு எதிராக 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். ஹர்ஷல் படேல் ஓவரில் 36 ரன்கள் எடுத்துச் சாதனை செய்தார். 

இந்த வருடம் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியதையடுத்து, சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT