ஐபிஎல்

விரலில் காயம்: இரு ஆட்டங்களைத் தவறவிடும் வாஷிங்டன் சுந்தர்

வாஷிங்டன் சுந்தரை ஏலத்தில் ரூ. 8.75 கோடிக்குத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி.

DIN

சன்ரைசர்ஸ் அணியில் விளையாடி வரும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், காயம் காரணமாக இரு ஆட்டங்களைத் தவறவிடுவார் என அறியப்படுகிறது.

வாஷிங்டன் சுந்தரை ஏலத்தில் ரூ. 8.75 கோடிக்குத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி. ஐபிஎல் 2022 போட்டியில் இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் 4 விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார்.

இந்நிலையில் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் சன்ரைசர்ஸ் அணியின் அடுத்த இரு ஆட்டங்களில் அவர் விளையாட மாட்டார் என்று அறியப்படுகிறது.

வாஷிங்டனின் காயம் ஒரு வாரத்தில் குணமாகிவிடும் என எதிர்பார்க்கிறோம் என்று சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி கூறியுள்ளார். 

வரும் வெள்ளியன்று கொல்கத்தாவுக்கு எதிராகவும் ஞாயிறன்று பஞ்சாபுக்கு எதிராகவும் சன்ரைசர்ஸ் அணி விளையாடவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT