ஐபிஎல்

தவான், அகர்வால் அரைசதம்: மும்பைக்கு 199 ரன்கள் இலக்கு

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் குவித்துள்ளது.

DIN


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. புணேவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

பஞ்சாப் தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் கேப்டன் மயங்க் அகர்வால், ஷிகர் தவான் களமிறங்கினர். தவான் பொறுமை காக்க, அகர்வால் அதிரடி காட்டினார். குறிப்பாக முருகன் அஸ்வின் ஓவரைப் பயன்படுத்திய அகர்வால் அந்த ஓவரில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸரை விளாசினார். இந்த அதிரடியால் பவர் பிளே முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் எடுத்தது.

டைமல் மில்ஸ் ஓவரில் சிக்ஸரை பறக்கவிட்ட அகர்வால் 30-வது பந்தில் அரைசதத்தைக் கடந்தார். ஆனால், அடுத்த ஓவரிலேயே முருகன் அஸ்வினிடம் அகர்வால் (32 பந்துகள் 52 ரன்கள்) வீழ்ந்தார்.

இதன்பிறகு, ரன் ரேட் சற்று குறையத் தொடங்கியது. தவான் 37-வது பந்தில் அரைசதத்தை எட்டினாலும், அதே ஓவரில் ஜானி பேர்ஸ்டோவ் 12 ரன்களுக்கு போல்டானார். அதற்கு அடுத்த ஓவரிலேயே ஜாஸ்பிரித் பும்ராவின் சிறப்பான யார்க்கரில் லியாம் லிவிங்ஸ்டன் (2) போல்டானார்.

கடைசி நேர அதிரடிக்கு தவான் பொறுப்பேற்க முயற்சித்தார். பசில் தம்பி பந்தில் பிரமாதமான சிக்ஸர் அடித்த தவான் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார்.

எனினும், ஜிதேஷ் சர்மா கடைசி கட்ட அதிரடியை முன்னின்று செயல்படுத்தினார். ஜெய்தேவ் உனத்கட் வீசிய 18-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாச பஞ்சாபுக்கு அந்த ஓவரில் 23 ரன்கள் கிடைத்தன.

கடைசி ஓவரில் ஷாருக்கானும் அதிரடியில் இணைய, பசில் தம்பி பந்தில் சிக்ஸர்கள் பறந்தன. ஆனால், பசில் தம்பி யார்க்கர் பந்தை சரியாக செயல்படுத்தியதால் 4-வது பந்தில் ஷாருக்கான் போல்டானார். அவர் 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் குவித்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜிதேஷ் சர்மா 15 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

மும்பை தரப்பில் பசில் தம்பி 2 விக்கெட்டுகளையும், ஜாஸ்பிரித் பும்ரா, ஜெய்தேவ் உனத்கட், முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமூக ஊடகத்தில் நீதிபதிகளின் கருத்துகள் தவறாக சித்தரிப்பு: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆதங்கம்

73-ஆவது பிறந்த நாள்: புதினுக்கு மோடி தொலைபேசியில் வாழ்த்து

ஏா் இந்தியா விமான விபத்து விசாரணை நியாயமாக நடைபெறுகிறது: ராம் மோகன் நாயுடு

பிகாா்: நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளா்களின் விவரங்களைச் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சமூக ஊடகத்தில் நீதிபதி குறித்து விமா்சனம்: ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கைது

SCROLL FOR NEXT