ஐபிஎல்

அதிக விக்கெட்டுகள்: முதலிடத்தை நெருங்கும் நடராஜன்

அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

DIN

ஐபிஎல் 2022 போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் சன்ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த நடராஜன், 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மும்பையில் வெள்ளியன்று நடைபெற்ற கொல்கத்தா - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ராணா 54 ரன்களும் ரஸ்ஸல் 49 ரன்களும் எடுத்தார்கள். தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளும் உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். சன்ரைசர்ஸ் அணி, 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் திரிபாதி 37 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்.

நேற்றைய ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகள் எடுத்த நடராஜன், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 5 ஆட்டங்களில் 11 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எகானமி - 8.50. 

அதிக விக்கெட்டுகள்

1. சஹால் (ராஜஸ்தான்) - 5 ஆட்டங்கள் - 12 விக்கெட்டுகள்

2. நடராஜன் (சன்ரைசர்ஸ்) - 5 ஆட்டங்கள் - 11 விக்கெட்டுகள்

3. குல்தீப் யாதவ் (தில்லி) - 4 ஆட்டங்கள் - 10 விக்கெட்டுகள்

4. தனஞ்ஜெயா (ஆர்சிபி) - 5 ஆட்டங்கள் - 10 விக்கெட்டுகள்

5. உமேஷ் யாதவ் (கொல்கத்தா) - 6 ஆட்டங்கள் - 10 விக்கெட்டுகள்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT