ஐபிஎல்

ஐபிஎல்: விதிமுறையை மீறிய கே.எல். ராகுல், ஸ்டாய்னிஸ்

ஐபிஎல் போட்டியில் விதிமுறையை மீறியதற்காக லக்னெள கேப்டன் கே.எல் ராகுலுக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

DIN

ஐபிஎல் போட்டியில் விதிமுறையை மீறியதற்காக லக்னெள கேப்டன் கே.எல் ராகுலுக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நவி மும்பையில் நேற்று நடைபெற்ற லக்னெள அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி அணி. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. டு பிளெஸ்சிஸ் 96 ரன்கள் எடுத்தார். பிறகு பேட்டிங் செய்த லக்னெள அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெற்றி பெற்ற ஆர்சிபி புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் கே.எல். ராகுல், ஸ்டாய்னிஸ் ஆகிய இருவரும் ஐபிஎல் விதிமுறையை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கே.எல். ராகுலுக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்டாய்னிஸுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஹேசில்வுட் பந்தில் போல்ட் ஆன ஸ்டாய்னிஸ், கோபத்தில் நடுவர் பக்கம் திரும்பி கோபத்துடன் பேசியபடி ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.     இதன் காரணமாக அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருக்கும் SIM CARD வாங்கித்தராதீங்க! புதிய SCAM ALERT! | Cyber Crime | Cyber Shield

ஈழத்தில் தமிழ்க்குரல்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

பெயரே சொல்லும்; கவிதை தேவையில்லை... சைத்ரா!

SCROLL FOR NEXT