முகப்பு
ஐபிஎல்

விரைவில் ஐபிஎல் சதம்: ஆர்சிபி கேப்டன்

ஐபிஎல் போட்டியில் விரைவில் சதமடிப்பேன் என ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்சிஸ் கூறியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

ஐபிஎல் போட்டியில் விரைவில் சதமடிப்பேன் என ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்சிஸ் கூறியுள்ளார்.

நவி மும்பையில் நடைபெற்ற லக்னெள அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி அணி. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. டு பிளெஸ்சிஸ் 96 ரன்கள் எடுத்தார். பிறகு பேட்டிங் செய்த லக்னெள அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெற்றி பெற்ற ஆர்சிபி புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் 2022 போட்டியில் 7 ஆட்டங்களில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Advertisement

இதையடுத்து ஆர்சிபி கேப்டன்  டு பிளெஸ்சிஸ் கூறியதாவது:

டி.ஒய். படேல் மைதானம் மிகப் பெரியது. இதனால் நிறைய இரண்டு ரன்கள் ஓடவேண்டியிருக்கும். கடைசியில் கொஞ்சம் சோர்வாகிவிட்டது. உங்களுடைய உடற்தகுதியை பரிசோதித்துக் கொள்வதற்கு இது நல்லதுதான். என்னுடைய முதல் ஐபிஎல் சதம் விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன். கடைசி மூன்று, நான்கு ஆட்டங்களைப் போல இதிலும் நாங்கள் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பிறகு எப்படியோ மீண்டு வந்து விட்டோம். கடைசி ஓவர்களில் நாங்கள் ஆபத்தான அணியாக உள்ளோம். ரன் எடுக்கும் வேட்கை என்னிடம் உள்ளது. என்னால் அதைச் செய்ய முடிவதில் மகிழ்ச்சி. கடந்த சில ஆட்டங்களில் சரியாக விளையாடாததால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என எண்ணினேன் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments