ஐபிஎல்

இதைச் செய்ய நாங்கள் தவறிவிட்டோம்: ரோஹித் சர்மா வருத்தம்

எங்கள் பேட்டர்களிடம் தன்னபிக்கை இல்லை என்றும் கூறலாம். இந்த வருடப் போட்டியில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை.

DIN

ஐபிஎல் 2022 போட்டியில் அதிக ரன்கள் எடுப்பதற்கான பொறுப்பை பேட்டர்கள் ஏற்கத் தவறியதால் தொடர்ந்து தோல்விகள் பெறுகிறோம் என மும்பை கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது லக்னெள அணி. முதலில் பேட்டிங் செய்த லக்னெள அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய மும்பை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 62 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த லக்னெள கேப்டன் கே.எல். ராகுல் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. நேற்றைய ஆட்டத்துக்குப் பிறகு ரோஹித் சர்மா பேட்டியளித்ததாவது:

இதுபோன்ற இலக்கு நிர்ணயிக்கப்படும்போது நல்ல கூட்டணி அமையவேண்டும். அது எங்களுக்கு அமையவில்லை. நான் உள்பட எங்களுடைய பேட்டர்கள் சிலர் பொறுப்பற்ற முறையில் ஷாட் விளையாடியதால் இன்னிங்ஸுக்குத் தேவைப்படுகிற சீரான் ரன் குவிப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. 

எங்கள் பேட்டர்களிடம் தன்னபிக்கை இல்லை என்றும் கூறலாம். இந்த வருடப் போட்டியில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. எல்லாமே பேட்டிங் குழுவைப் பொறுத்துதான் அமையும். களத்தில் உள்ள பேட்டர்கள் ரன்கள் குவிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பேட்டராவது அதிக ஓவர்களுக்கு விளையாடுவதுபோலப் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த வருடம் இதைச் செய்ய நாங்கள் தவறிவிட்டோம். எங்களுடைய பேட்டர் யாரும் நீண்ட நேரம் விளையாடவில்லை. ஆனால் மற்ற அணிகளின் பேட்டர்கள் அதைச் செய்துள்ளார்கள். எவ்விதச் சூழலாக இருந்தாலும் ஒரு பேட்டர் அதிகப் பந்துகளை எதிர்கொள்ளுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT