ஐபிஎல்

கோலி தொடக்க ஆட்டக்காரர்: பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

DIN


ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பெங்களூரு அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனுஜ் ராவத்துக்குப் பதில் ரஜத் படிதார் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம், தொடக்க ஆட்டக்காரராக ராவத்துக்குப் பதில் டு பிளெஸ்ஸியுடன் விராட் கோலி களமிறங்குகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கருண் நாயர், ஒபெட் மெக்காய் நீக்கப்பட்டு டேரில் மிட்செல், குல்தீப் சென் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவக்கம்?

மொழியால் அல்ல, வேறு சில காரணங்களால் தெலுங்கில் நடிக்க சிரமம்: சம்யுக்தா மேனன் அதிரடி!

சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் அதிரடி சோதனை!

தாமதமாகும் வாக்குப்பதிவு விவரங்கள்: உச்ச நீதிமன்றத்தில் மனு

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

SCROLL FOR NEXT