ஹைதராபாத்தில் மீண்டும் வாஷிங்டன்: குஜராத் பந்துவீச்சு தேர்வு
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று (புதன்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகின்றன.
இதையும் படிக்க | நோ பால் சர்ச்சை: கோபத்தில் டிவி ரிமோட்களை உடைத்த ரிக்கி பாண்டிங்!
டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். குஜராத் அணி கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே வீரர்களுடன் விளையாடுகிறது.
ஹைதராபாத் அணியில் ஒருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயத்திலிருந்து குணமடைந்த வாஷிங்டன் சுந்தர் இந்த ஆட்டத்தில் விளையாடுகிறார்.