ஐபிஎல்

சிஎஸ்கே அணியின் புதிய சீருடை அறிமுகம்

சிஎஸ்கே அணி 2010, 2011, 2018, 2021 ஆகிய 4 ஆண்டுகளிலும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளதால்...

DIN

ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ஐபிஎல் 2022 போட்டி மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. 70 லீக் ஆட்டங்கள் மும்பை, புணேவில் நடைபெறவுள்ளன. 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் விளையாடவுள்ளன. குரூப் ஏ-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி-வில் சென்னை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. சிஎஸ்கே அணி - மும்பை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. 

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீருடையில் சிஎஸ்கேவின் இலச்சினைக்கு மேலே நான்கு நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. சிஎஸ்கே அணி 2010, 2011, 2018, 2021 ஆகிய 4 ஆண்டுகளிலும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளதால் அதைக் குறிப்பிடும் விதமாகச் சீருடையில் 4 நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. டிவிஎஸ் யூரோகிரிப் டயர்ஸ் அணியின் முக்கிய விளம்பரதாரராக இருப்பதால் அந்நிறுவனத்தின் பெயர் சீருடையின் முன்பக்கத்தில் பெரிதாக இடம்பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT