ஐபிஎல்

ஐபிஎல் தொடர்: மும்பையை வீழ்த்தியது தில்லி

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.

DIN

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2022 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் மும்பை மற்றும் தில்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினர்.

இருப்பினும், சிறப்பாக பந்து வீசிய குல்தீப் ரோகித்தின் விக்கெட்டை கைப்பற்றினார். குல்தீப்பின் சுழலில் மற்ற வீரர்கள் நிலைகுலைந்தாலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய, கிஷன் அரை சதம் அடித்தார். இறுதியாக, ஐந்து விக்கெட் இழப்புக்கு மும்பை 177 ரன்களை எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 48 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தில்லி அணியில் குல்தீப் 18 ரன்கள் விட்டு கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தில்லி அணி களமிறங்கியது.

ஆனால் அந்த அணி 18.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. தில்லி அணியின் அதிகபட்சமாக பிரித்வி ஷா, லலித் யாதவ் 48, அக்ஸர் படேல் 38 ரன்கள் எடுத்தனர். மும்பை அணியில் பாசில் தம்பி 3, முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

SCROLL FOR NEXT